சிவப்பழகிற்கு (பெண்களுக்கு மட்டும்)

பலருக்கும் தாம் சிவப்பாக இருக்கவேண்டும் என ஆசை, என்ன செய்வது திராவிடனாகப் பிறந்தால் இதுதான் நம்ம கலர் என நினைத்த காலம் மலையேறிப்போய் பலகாலம். இப்பொழுது சகல கடைகளிலும் சிவப்பழகு பூசுமருந்துகள்(கிறீம்) கிடைக்கின்றது. அதனைப் பூசி சிவாஜி ரஜனிபோல் வெள்ளையாக மாறியவர்கள் இருக்கிறார்கள். இந்த மருந்துகளை விட சீனமருத்துவம் இன்னொரு மருந்தை சிபாரிசு செய்கிறார்கள்.

உங்கள் முகம் சிவப்பழகாக மாற நண்பர் நிர்ஷன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை உங்கள் பார்வைக்கு தருகின்றேன். செய்முறை விளக்கம் ஒன்றும் தேவைப்படாது என நினைக்கின்றேன். காரணம் ஒவ்வொரு படமும் மிகவும் அழகாக என்ன செய்யவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

டிஸ்கி: இதனை நீங்களும் செய்துபார்த்து முகம் சிவப்பாக வந்தால் எனக்குச் சொல்லவும் வேறு பின்விளைவுகளுக்கு நண்பர் நிர்ஷனை அனுகவும்.







தினக்குரலில் வந்தியத்தேவனின் உளறல்கள்.

தினக்குரலில் வந்தியத்தேவனின் உளறல்கள்.



இன்றைய ஞாயிறு தினக்குரலில் என்னுடைய வலையைப் பற்றி நண்பர் க.தே.தாசன் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது.

இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது. சென்ற வாரங்களில் டொக்டர்.முருகானந்தன், பிரபல எழுத்தாளர் உடுவை, இலங்கை வலைப் பதிவாளர்களில் மிகவும் பிரபலம் பெற்ற மாயா ஆகியோரின் வலைப்பதிவுகளுக்கு அடுத்ததாக என்னுடைய வலைப்பதிவும் வெளிவந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

தினக்குரலுக்கும் தாசனுக்கும் மிக்க நன்றிகள்.

சும்மா இணையத்தில் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருந்த என்னை ஏதாவது எழுது எனத் தூண்டிய இனிய தமிழக உறவுகள் பூக்குட்டி, லக்கிலுக் ஆகியோருடன் புலம் பெயர்தேசத்தில் வாழும் இன்னொரு உறவான லீனா அண்ணாவுக்கும், கானாப் பிரபாவுக்கும் நன்றிகள்.

இலங்கையிலிருக்கும் அனைத்து வலைப்பதிவாளர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தம்பி மாயாவுக்கும்(எனக்குப் வலைஉலக தொழில் நுட்பங்களை சொல்லிக்கொடுத்தவர்) ந‌ன்றிகள்.

அத்துடன் ஊக்கம் கொடுத்த வர்மா அவர்களுக்கும் நன்றிகள்.

மேலும் இணையத்தில் எனக்கு பின்னூட்டம் இட்டத்துடன் தனிப்பட்ட முறையில் ஊக்கமும் பாராட்டுக்களும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பலப்பல.

மெற்ரோ நியூஸில் வந்தியத்தேவன்.

மெற்ரோ நியூஸில் வந்தியத்தேவன்.
இன்றைய(23.01.2008) மெற்ரோ நியூஸில் வெப் சைட் என்ற பகுதியில் எனது வலையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். மெற்ரோ நியூசுக்கு நன்றிகள்.

அண்மையில் நண்பர் ஒருவர் எனது புனை பெயரின் காரணத்தைக் கேட்டிருந்தார். ஏற்கனவே வலையில் என்னுடைய பெயரையுடைய மூன்று பேர்கள் எழுதுகின்றார்கள் நாலாவதாக அவர்களுடன் சேர்ந்து நான் பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சிறுவயதில் நான் ரசித்துப் படித்த வீரபுருஷன் வந்தியத்தேவனின் பெயரை என் புனைபெயராக வைத்துள்ளேன். வந்தியத்தேவன் போல் வீரம் இல்லாவிட்டாலும் அவரைப்போல் அடிக்கடி ரகளை செய்யும் குணம் எனக்கு இருக்கிறது.